இலங்கை ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வலியுறுத்தி தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகளின் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழக - புதுச்சேரி மீனவர்களின் படுகொலைக்குக் காரணமான இலங்கை ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வலியுறுத்தி தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி சுதேசி மில் அருகில் மங்கையர் செல்வன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறி கொடுந்தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசு உடனான அரசியல் உறவுகளை உடனே முறித்துக் கொள்ள வேண்டும் என்றும்,இதுவரையில், ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்களை அத்து மீறிப் படுகொலை செய்துள்ள இலங்கை ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மீனவ கிராமத் தலைவர்கள், பஞ்சாயத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments